நிவாரணப்பொருட்களை ஏற்றிச்சென்ற செஞ்சிலுவை சங்க பாரஊர்தி விபத்திற்குள்ளானது!

Saturday, September 23rd, 2017

மியன்மாரில் இடம்பெறும் தாக்குதல்களுக்குப் பயந்து சிறுபான்மை ரோஹிஞ்யா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

அவ்வாறு சென்ற சுமார் 3 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காக்ஸ் பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற செஞ்சிலுவை சங்கத்தின் லொறி ஒன்று நேற்றுமுன்தினம் (21) மலைப் பிரதேசமான பந்தர்பன் பகுதிக்குப் பயணித்தது.

அப்போது காக்ஸ் பஜார் பகுதிக்கு 50 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக டிரக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.இதன்போதுஇ நிவாரணப் பொருட்களை லொறியிலிருந்து ஏற்றிஇ இறக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

Related posts: