யேமன் போர்நிறுத்தம்:ஐ.நா. வரவேற்பு

Tuesday, April 12th, 2016
யேமனில் அமுலுக்கு வந்துள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. அந்நாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த மோதல்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
அந்நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான ஒரு உண்மையான வாய்ப்பை இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் வழங்குவதாக யேமனுக்கான ஐ.நா. தூதுவர் இஸ்மயில் தெரிவித்துள்ளார். யேமன் தலைநகர் சனாவுக்கு வெளியே சில போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
சவூதி தலைமையிலான கூட்டுப்படையின் ஆதரவுபெற்ற அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவான படைகளுக்கும் ஈரான் ஆதரவுடனான ஹூத்தி கிளர்ச்சிக்காரகளுக்கும் இடையிலான மோதல்களால், இருபது லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

Related posts: