யுக்ரைனின் இரு பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளடிமிர் புட்டின்!

Friday, September 30th, 2022

யுக்ரைனின் ஷெபோரீஷியா மற்றும் கேர்சன் ஆகிய பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டின் ஆணைப் பிறப்பித்துள்ளார்.

யுக்ரைனின் ஷெபோரீஷியா பகுதியில் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனுமின் உற்பத்தி நிலையம் ஆகியன அமைந்துள்ளன.

அத்துடன் இன்றையதினம் கிழக்கு யுக்ரைனின் நான்கு பகுதிகள் சர்வசன வாக்கெடுப்பின் பின்னர் ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யுக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டொலரை, நிதியுதவியாக வழங்க அமெரிக்க செனட் சபை அனுமதியளித்துள்ளது.

யுக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் டொலர்களை புதிய அவசர கால இராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்புக்காக யுக்ரைனுக்கு வழங்குமாறு அமெரிக்க செனட் சபையை அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக் கொண்டார்.

அவரது வேண்டுகோளை ஏற்ற செனட் சபை உக்ரைனுக்கு 12 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: