மோசூல் நகரம் வெகு விரைவில் கைப்பற்றப்படும்: ஈராக் பிரதமர்

ஈராக்கின் மோசூல் நகரம் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து வெகு விரைவில் கைப்பற்றப்படும் என ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல் அப்பாதி தெரிவித்துள்ளார்.
மோசூலை கைப்பற்றுவது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மோசூலில் உள்ள அல் – நூரி மசூதி ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டது. அத்துடன் அங்குள்ள பழமை வாய்ந்த தூபி ஒன்றும் சேதமாக்கப்பட்டது.
குறித்த பயங்கரவாதிகளை மோசூலில் இருந்து விரட்டியடிக்கும் பொருட்டு ஈராக் படைவீரர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு ஐ.எஸ் இனால் நடத்தப்பட்ட எதிர்த் தாக்குதலின் போதே மேற்படி சேதம் விளைவிக்கப்பட்டதாக ஈராக் இராணுவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நகரம் ஐ.எஸ் இடமிருந்து வெகு விரைவில் கைப்பற்றப்படும் என அப்பாதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Related posts:
|
|