மொசூல் அருகே ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது இராக் இராணுவம் புதிய தாக்குதல்!
Monday, February 20th, 2017
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் உள்ள மொசூல் நகரின் மேற்குப்பகுதியை விடுவிக்கும் நோக்கில் இராக் அரச படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன.
இன்று அதிகாலையில் பாலைவனப்பகுதியை தாண்டி அமைந்துள்ள ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்த நூற்றுக்கணக்கான ராணுவ வாகனங்கள் வான்வழி ஆதரவுடன் முன்னேறின.
இந்த நடவடிக்கை தொடங்கி முதல் சிலமணி நேரங்களில் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருந்த பல கிராமங்களை இராக்கிய படைகள் மீண்டும் கைப்பற்றின.
அந்தப் பகுதியில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கானோரின் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் நடவடிக்கையை இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
மொசூல் விமானநிலையத்தின் தென் பகுதியிலிருக்கும் இரு கிராமங்களை சிறப்பு அதிவிரைவு படைகள் அத்பா மற்றும் அல்-லஸ்ஸாகா ஆகியோர் கைப்பற்றியுள்ளதாக ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் அப்துலாமிர் யாராஹல்லா செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


