மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளே உலகம் தற்போது பதற்றமான நிலைமையில் இருப்பதற்கு காரணம் – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் சுட்டிக்காட்டு!
Friday, December 29th, 2023
சர்வதேச ரீதியில் செல்வாக்கை இழந்து வரும் மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளே உலகம் தற்போது பதற்றமான நிலைமையில் இருப்பதற்கு காரணம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் உள்ள எவரும் 2024 ஆம் ஆண்டில் மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேற்குலக நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் தமது பிரச்சினைகளை தீர்க்க மக்களைப் பயன்படுத்தி, தமது நாடுகளின் எல்லைகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாடுகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமது ஆதிக்கம் கைகளை விட்டுப் போய்விடும் சூழல் இருப்பதால், அந்நாடுகள் மேற்கொள்ளும் புவிசார் சூழ்ச்சிகளில் இருந்து எவரையும் பாதுகாக்க முடியாது.
ஏனைய நாடுகளின் மத்தியில் இந்தப் புரிதல் வளர்ந்து வருகிறது எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்டுவரும் பதற்றங்கள், போர் ஆகியவற்றுக்கு மேற்குலக நாடுகளே காரணம் என்றுமு் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


