மேயான் எரிமலை வெடித்துச் சிதறறும் அபாயம்!
Wednesday, January 24th, 2018
பில்ப்பைன்ஸ் நாட்டின் மேயான் எரிமலை வெடித்தச்சிதறலாம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்க செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.
“மேயான்” எரிமலையானது கடந்த சில நாட்களாகவே சீற்றம் கொண்டுள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கருதி சுமார் 27 ஆயிரம் கிராம மக்கள் அவர்களின் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்னும் சில நாட்களில் மேயான் எரிமலை வெடித்துச்சிதறவுள்ளது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேயான் எரிமலை கடந்த சில நாட்களாக லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் அருகில் உள்ள கிhமங்களில் இருள் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் அனைவரையும் வெளியேறுமாறு பிலிப்பைன்ஸ் பொலிஸார் கோரியுள்ளனர்.
Related posts:
கர்நாடகா வாழ் அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை!
எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை!
மியன்மார் கலவரம் தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர்!
|
|
|


