அழகான விளையாட்டின் அசிங்கமான முகம்’: கத்தார் மீது அம்னெஸ்டி இண்டர் நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு விமர்சனம்!

Friday, April 1st, 2016

‘அழகான விளையாட்டு ஒன்றின் அசிங்கமான முகம்’. – என அம்னெஸ்டி இண்டர் நேஷனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு 2022 ஆண்டின் கால்பந்து இறுதிப் போட்டிகளுக்கான ஏற்பாட்டை வர்ணித்துள்ளது.

கத்தாரில் 2022 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கால்ப்பந்து உலகக்கோப்பை போட்டிகளை முன்னிட்டு அங்கு கட்டட வேலைகளில் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் திட்டமிட்ட வகையில் பரவலான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

சில சமயங்களில் தொழிலாளர்கள் கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறித்த மனித உரிமைகள் குழு சாடியுள்ளது.

கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொழில் இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தமது கடுமையான கவலைகளை முன்னர் மனித உரிமைகள் குழு வெளியிட்டிருந்தாலும், உலகக்கோப்பை மைதானங்களை கட்டும் தொழிலாளர்கள் மீதான முறைகேடு குறித்து நேடியாக குற்றஞ்சாட்டியுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

ஆனால் புதிய சட்டங்கள் வெளிநாட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் என கத்தார் அரசாங்கம் தெரிவித்திருந்தது. அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்த அறிக்கைக்காகப் பேசியவர்களில் அனேகமானோர் இந்தியா, வங்கதேசம், மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாவர். கத்தாரின் மொத்த சனத்தொகையில் 90 வீதமானோர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Related posts: