மேப்பிள் இலை தங்க நாணயம் கொள்ளை!

Tuesday, March 28th, 2017

றோயல் கனடிய மின்டினால் வெளியிடப்பட்ட எண்ணற்ற தங்க நாணயம் ஜேர்மனி மியுசியத்திலிருந்து களவாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் தலைநகரின் போட் மியுசியத்தை உடைத்து நுழைந்து 100-கிலோ கிராம் எடையுள்ள- மில்லியன் டொலர்கள் மதிப்பு கொண்ட தங்க நாணயத்தை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பேர்லின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

“Big Maple Leaf” நாணயம் 3-சென்ரி மீற்றர்கள் தடிப்பு 53-சென்ரி மீற்றர்கள் குறுக்களவையும் கொண்டவை. பிரித்தானிய இளவரசியின் படத்தை முகப்பில் கொண்டவை.

உலகில் மிக பெரிய நாணய சேர்க்கைகள் எனவும் 2010-லிருந்து அதன் நாணயவியல் சேகரிப்பில் கடனாக இருந்த வருகின்றது என அதன் வலைத்தளத்தில் கூறப்படுகின்றது.

2007-ல் றோயல் கனடியன் மின்ரினால் வெளியிடப்பட்ட இந்நாணயம் அதன் 999.99/1000 தங்க தூய்மை காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது.

இந்த நாணயம் றோயல் கனடிய மின்ரிற்கும் சொந்தமானதல்ல என தெரிவித்த மின்ட் பேச்சாளர் அலெக்ஸ் றீவ்ஸ், உணமையில் அதன் உரிமையாளர் யார் என்பதும் தெரியாதென தெரிவித்துள்ளார்.

இதன் பார்வை மதிப்பு 1-மில்லியன் டொலர்கள் ஆனால் எடையளவில் சந்தை விலை கிட்டத்தட்ட 4.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியானதெனவும் தெரிவித்துள்ளார்.10-வருடங்களிற்கு முன்னர் 5-நாணயங்கள் உருவாக்கப்பட்டன. திருடப்பட்டது ஐந்தில் ஒன்றாகும்.

திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கொள்ளையர்கள் ஜன்னல் ஒன்றின் ஊடாக நுழைந்து நாணயம் வைக்கப்பட்டிருந்த கபினெட்டை உடைத்து திருடிக்கொண்டு பொலிசார் வருவதற்கு முன்னதாக தப்பி சென்றுவிட்டனர் என மியுசியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Related posts: