மெதடிஸ்த பெண்கள் எல்லேயில் சம்பியன்!

வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லேயில் சம்பியனாகியது பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலை.
வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே தொடரில், பெண்கள் பிரிவு இறுதியாட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் மணற்காடு றோ.க.த.க. பாடசாலையும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மணற்காடு றோ.க.த.க. பாடசாலை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துகளில் அனைத்து இலக்குகளையும் இழந்து 7 ஓட்டங்களைப் பெற்றது. அதிக பட்சமாக நிதர்சனா, நிறோஜா ஆகியோர் தலா 2 ஓட்டங்களையும் விவவின்ஜா, மைதிலி மற்றும் சுகிர்தா ஆகியோர் தலா ஓர் ஓட்டத்தையும் பெற்றனர்.
தொடர்ந்து 8 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மெதடிஸ்த பெண்கள் அணி 30 பந்துகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அஜித்தா 3 ஓட்டங்களையும், கிசோறி மற்றும் மனோஜா ஆகியோர் தலா 2 ஓட்டங்களையும் சுவர்ணசீலி ஓர் ஓட்டத்தையும் பெற்றனர்.
Related posts:
|
|