விமானங்களை தாக்கி அழிப்போம்! கட்டாருக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை!

Wednesday, August 16th, 2017

மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் கட்டார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால், தாக்குதல் மேற்கொள்வதற்கான உரிமை உள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

கட்டார் அரசாங்கத்துடன் தொடர்பை நிறுத்தியுள்ளதன் பின்னர், சவூதி விமான எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு சவூதி அறிவித்துள்ளது.

கட்டார் அதனை செவி கொடுக்காமல் செயற்பட்டால் அந்நாட்டு விமானங்களை தாக்குதல் நடத்தி வீழ்த்துவதாக சவூதி எச்சிரிக்கை விடுத்துள்ளது.

தங்கள் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் சீராக வைக்கப்பட்டுள்ளதாக சவூதி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அண்மைக்காலமாக கட்டார் மற்றும் அதன் பிராந்திய நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளன.

பயங்கரவாதிகள் மற்றும் ஈரானுடன் கட்டார் நெருக்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி சவூதி அரேபியா தலைமையிலான நான்கு நாடுகள் இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளன.

இந்நிலையில் பிராந்திய நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகளை கட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

இவ்வாறான நிலை தொடருமாயின் வளைகுடாவில் மற்றுமோர் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts: