மெக்ஸிகோ புதிய  ஜனாதிபதியின் முதல் நகர்வாக சொகுசு விமானம் விற்பனைக்கு!

Monday, December 3rd, 2018

மெக்ஸிகோவின் இடதுசாரி தலைவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவருக்கான உத்தியோகபூர்வ, மிகப் பெரிய மற்றும் அதிசொகுசு விமானத்தை விற்பனைக்கு விட்டுள்ளார்.

நாட்டின் மேலதிக செலவினங்களை குறைக்கும் முதல் நகர்வாக புதிய ஜனாதிபதியான 65 வயதான அண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோரின் (Andres Manuel Lupez Obrador) உத்தரவிற்கிணங்க குறித்த ஆடம்பர விமான மெக்ஸிகோ சிற்றியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் உட்பகுதி சுவர்கள், தட்டையான திரைகள், கண்காணிப்பு அம்சங்கள், அதே போல் ஜனாதிபதி படுக்கையறை மற்றும் பளிங்கு குளியலறை, உத்தியோகபூர்வ அரசாங்க முத்திரைகள், விசாலமான உள்ளமைப்புகள் என்பன ஔிப்படக்காரர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மிகுந்த முயற்சியுடன் 218 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட குறித்த விமானம் 60 அரச விமானங்களில் ஒன்றாகும். அத்துடன் 70 உலங்கு வானூர்திகளும் மெக்ஸிகோ வசம் இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு புதிய உரிமையாளருக்கான எதிர்பார்ப்புடன், போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரையில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள விக்டர்வில்லே விமான நிலையத்திற்கு குறித்த விமானம் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: