மூளை உறையழற்சியினால் நைஜீரியாவில் 140 பேர் மரணம்!

நைஜீரியாவில் மூளை உறையழற்சி(meningitis) நோயினால் இதுவரையில் 140 பேர் மரணித்துள்ளனர். நைஜீரியாவின் சில மாநிலங்களில் இந்த நோய் பரவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகதி முகாம்கள், சிறைச்சாலைகள், காவல்துறை தடுப்புக் காவல்கள் போன்ற இடங்களில் நோய் பரவினால் பாரியளவு அழிவுகள் ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய்க்கு எதிராக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Related posts:
அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவியதில் ரஷியாவுக்கு தொடர்பு?
ரஷ்ய தூதுவர் படுகொலைக்கு இலங்கை கண்டனம்!
மாலைதீவு ஜனாதிபதியாக சாலிக் பதவி ஏற்பு!
|
|