தாய்லாந்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி!

Wednesday, August 24th, 2016

 

தாய்லாந்தில் கடற்கரை நகரமொன்றில் ஹொட்டல் முன்பு கார் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் சுற்றுலா நகரமான Pattani ல் உள்ள உணவு விடுதி ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்துள்ளது. ஹொட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அந்த காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்தே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் அந்த ஹொட்டலின் முகப்பு மற்றும் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்துள்ளது. தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்தவரை உடற்கூறு மருத்துவர்களிடம் சேர்ப்பித்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகைதரும் ஹொட்டல் என்பதால் இது திட்டமிடப்பட்டே நடத்தப்பட்டுள்ளது என முதன்மை தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியான நபர் எந்த நாட்டவர் என்பது இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, குறிப்பிட்ட ஹொட்டலில் இரண்டு முறை வெடிகுண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. முதல் வெடிகுண்டு வாகன நிறுத்தத்தில் வெடித்துள்ளதாகவும் அதில் எந்த உயிர் அபாயமும் ஏற்படவில்லை என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

இரண்டாவது வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலை நடத்தியவர்கள் 20 பேர் கொண்ட கும்பல் எனவும், அவர்கள் மாலேசிய இஸ்லாமியர் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அரசு வட்டாரங்கள் இந்த தகவலை மறுத்துள்ளது மட்டுமின்றி 20 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பதை மறுக்கவில்லை.

Related posts: