அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவியதில் ரஷியாவுக்கு தொடர்பு?

Saturday, September 10th, 2016

நாடு கடந்து ரஷ்யாவில் வாழ்ந்து வரும் அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட்டவரான எட்வர்ட் ஸ்நோடன், ரஷியாவின் மனித உரிமைகள் பதிவுகள் மீது அரிய தாக்குதல் ஒன்றை தொடுத்துள்ளார். மேலும், சமீபத்திய கணிணி ஹேக்கிங் மோசடியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முற்றிலும் தேவையற்ற, அதிக செலவு பிடிக்ககூடிய மற்றும் சேதங்களை உண்டாக்கும் விவகாரங்களில் தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளில் வரம்பு மீறி ரஷியா செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அரசாங்கத்தின் இரு பெரிய இணையதளங்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியில், பெரும்பாலனவர்கள் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் ரஷியா இருப்பதாக கருதுவதாகவும், ஜனநாயக கட்சியினரின் மின்னஞ்சல்கள் கசிந்தததற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என்பதை தானும் நம்புவதாகவும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

எட்வர்ட் ஸ்நோடன் ஒரு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் ஆய்வளாராக இருந்தார். மூன்று ஆண்டுகளுக்குமுன், மிகப்பெரிய தகவல்களை அவர் கசியவிட்டதால் பல அமெரிக்கர்களால் துரோகி என முத்திரை குத்தப்பட்டார். தன்னுடைய மிக பெரிய விசுவாசம் அமெரிக்காவுக்கே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

151111055610_edward_snowden_976x549_afp

Related posts: