முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆந்திராவில் சிலை!
Friday, December 9th, 2016
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆந்திராவில் சிலை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த சிலை 9 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ளது.
மேலும் இதற்கு 9 லட்சம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா உடல் நலமின்றி கடந்த 5ம் தேதி காலமானார். அவரது நினைவுகளுக்கு அதிமுக தொண்டர்கள் பல்வேறு வகையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையிலேயே தற்போது சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஜெயலலிதாவின் சிலையை முழுமையாக செய்து முடிக்க 2 மாதங்கள் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலைகள் செய்யும் பணி ஐதராபாத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொம்முலூரு என்ற கிராமத்தில் தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:
மனசாட்சியுடன் வாக்களியுங்கள் - மீரா குமார் !
18 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – தடுமாறும் வல்லாதிக்க நாடுகள்!
கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு - 150 மாணவர்களை கடத்திச் சென்ற கும்பல்!
|
|
|


