மனசாட்சியுடன் வாக்களியுங்கள் – மீரா குமார் !

Monday, June 26th, 2017

ஜனாதிபதி தேர்தலில் மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டசபை உறுப்பினர்களுக்கு மீரா குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் ஜனாதிபதிகள் பதவி பிரமாணம் ஏற்கும் போது இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாகிய அரசியல் சாசனத்தை காக்கவும் அதை சார்ந்து செயல்படவும் வாக்களிக்கிறார்கள்.

சட்டங்கள் இயற்றுவதற்கு இறுதி உரைகல்லாக ஜனாதிபதி அலுவலகத்தையே அரசியல் சாசனம் அங்கீகரித்திருக்கின்றது. எனவே ஜனாதிபதி தேர்தலில் உங்கள் மனச்சாட்சியின் பிரகாரம் வாக்களியுங்கள் என மீரா குமார் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 17 ஆம் திகதி நடைபெறுகிறது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். பாரதிய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் மீரா குமார் நாளை மறுநாள் (28 ஆம் திகதி) தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

Related posts: