முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களுக்கு தடை!

Wednesday, November 28th, 2018

முதலாம், இரண்டாம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலையில் வீட்டுப் பாடங்களை வழங்கக்கூடாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் நலன்கருதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த உத்தரவை அனுப்பி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களில் மொழி, கணிதம் முதலான பாடங்களைத் தவிர வேறு எந்த பாடங்களையும் பாடசாலைகளில் கற்பிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் புத்தகப் பை ஒன்றரை கிலோ நிறையைவிட அதிகரிக்கக்கூடாது என்றும் இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: