முடிசூட்டிக்கொள்ள அவகாசம் கேட்டு ஆச்சரியமூட்டியுள்ள தாய்லாந்து பட்டத்து இளவரசர்!
Friday, October 14th, 2016
தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட் மறைந்ததை தொடர்ந்து, தாற்காலிக பிரதிநிதி ஒருவர் உயர்நிலை அரச ஆலேராசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிய மன்னர் முடிசூடுவதற்கு முன்னால், எதிர்பார்க்கப்படாத வகையில், முன்னாள் பிரதமர் பிரேம் டின்சுலாநோன்டா அரச குடும்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.பட்டத்து இளவரசர் மஹா வஜிரலோங்கோன் அடுத்த மன்னராக முடிசூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தன்னுடைய தந்தையின் இழப்பினால் ஏற்பட்டுள்ள துக்கத்தை அனுசரிக்க, அதிக நேரம் தேவைப்படுவதால், அரியணை ஏறும் வழிமுறையை தொடங்குவதை சற்று தாமதப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுள்ளதாக தோன்றுகிறது அவருடைய இந்த வேண்டுகோள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts:
மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசல் கொண்டு சென்ற கப்பல் கடத்தப்பட்டது!
கடலில் மிதக்கும் கப்பல் வெடிகுண்டு: வெளியான திடுக்கிடும் தகவல்!
சீனாவின் போர் ஒத்திகைகள் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றன – அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!
|
|
|


