மீண்டும் போட்டியிட விரும்பாத பிரணாப்!
Saturday, May 27th, 2017
இந்திய குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த குடியரசுத் தலைவர், மீண்டும் ராஷ்டிரபதி பவனுக்கு செல்லும் போட்டியில் பங்கேற்கும் எண்ணமில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் எனது பணி நிறைவு பெற இருக்கிறது. ஜூலை 25 ஆம் திகதி புதிய குடியரசுத் தலைவர் பொறுப்பேற்க உள்ளார் என்றார். இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று டெல்லியில் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
அமெரிக்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ஈரான்!
டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எச்சரிக்கை
தென் கொரியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா - கடந்த 24 மணித்தியாலத்தில் 79 பேர் பாதிப்பு!
|
|
|


