மியன்மார் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை இரத்துச் செய்தார் ஒபாமா ?
Saturday, October 8th, 2016
மியன்மார் மிக நீண்டகாலமாக விதித்திருந்த பொருளாதாரத் தடையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவியும், மாநில ஆலோசகருமான ஆன் சான் சூகியுடன் கடந்த மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, மியன்மாருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக ஒபாமா உறுதியளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மியன்மாரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்து, கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது.இதுதொடர்பான உத்தரவை நேற்று பிறப்பித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கக் கடிதத்தில், ‘மியான்மர் நாட்டில் முன்னர் நிலவிவந்த தேசிய அவசரநிலை பின்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையடுத்து தற்போது மாற்றம் அடைந்து. அங்கு ஜனநாயகம் மேலோங்கி வருவதால் மியான்மர் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒபாமாவின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அவர் பல நாடுகளுடனும் அமெரிக்கா கொண்டுள்ள பகையை நீக்கி நட்புறவை மேம்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


