மாறுமா அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவி? டிரம்ப் இனது வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு!

Sunday, November 27th, 2016

விஸ்கான்சின் மாகாணத்தில் டிரம்ப் வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8ம் திகதி நடந்தது. அதில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். மக்கள் அளித்த ஓட்டு எண்ணிக்கையில் ஹிலாரிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால் அமெரிக்க நாட்டின் முறைப்படி அதிபரை தேர்வாளர்கள் தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால் டிரம்புக்கு அதிக தேர்வாளர்கள் கிடைத்தால் அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

எனவே, தேர்வாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஹிலாரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஸ்கான்சின் , மிக்சிகான், பென்சில் வேனியா ஆகிய 3 மாகாணங்களில் டிரம்ப் வென்றார். அதன் மூலம் அவருக்கு அதிக தேர்வாளர்கள் கிடைத்தனர்.

எனவே அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்கான்சின் மாகாணத்தில் மறு ஓட்டு எண்ணிக்கை கேட்ட கடைசி நாளான நேற்று(25) மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கிரீன் கட்சி வேட்பாளர் ஷில் ஸ்டெயின் தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்துள்ளார்.

இத்தகவலை விஸ்கான்சின் தேர்தல் கமி‌ஷன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அனேகமாக இந்த மறு வாக்கு எண்ணிக்கை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே போன்று மிக்சிகான், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களிலும் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு மனு செய்யபோவதாக ஷில் ஸ்பெயின் தெரிவித்துள்ளார்.

பென்சில் வேனியாவில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்ய நாளை மறு தினம் (28ம் திகதி) யும் மிக்சிகானில் 30-ந் தேதியும் கடைசி நாளாகும். இதன் மூலம் அமெரிக்காவில் தேர்தல் முடிவு திருப்பு முனையை ஏற்படுத்துமா என்பது விரைவில் தெரிய வரும்.

HILARI

Related posts: