மலேசியாவில் 15 பேர் கைது!

Sunday, June 3rd, 2018

ஆயுதங்களை கடத்தி பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக வெளிநாட்டினர் உள்ளிட்ட 15 பேரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.

மலேசியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு படை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஏப்ரலில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேளிக்கை விடுதிகள், திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்க அந்த வாலிபர் திட்டமிட்டுள்ளார். அவரிடம் இருந்த 5 வெடிகுண்டுகளில் ஒன்றை பொதுஇடத்தில் வைத்து வெடித்து சோதனை செய்து பார்த்துள்ளார். இந்த தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

கடந்த மாதம் 51 வயது பெண்மணியை போலீசார் கைது செய்தனர். வழிபாட்டுத்தலங்களில் தாக்குதல் நடத்தவும், காரில் எரிவாயுவை நிரப்பி வெடிக்கச்செய்து அப்பாவிகளை படுகொலை செய்யவும் திட்டமிட்டிருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.ஐ.எஸ். அமைப்பில் சேருவதற்காக துருக்கி பயணப்பட இருந்த 33 வயதான வாலிபர், ஆப்ரிக்க தம்பதி உள்பட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று 15 பேரை பயங்கரவாத தடுப்பு சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர், பிலிப்பைன்சில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட ஒரு மலேசியர், 6 பிலிப்பைன்ஸ் குடிமக்கள் அடங்குவர்.

Related posts: