மலேசியாவில் அகதிகளுக்கு நேர்ந்த துயர் – 11 பேர் பலி – 25 பேர் மாயம்!
Thursday, December 16th, 2021
மலேசியாவின் தென் பகுதியின், ஜோகர் மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்தில் சிக்கியதில் 11 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெண்கள், சிறுவர்கள் உட்பட 60 பேருடன் பயணித்த குறித்த படகு எதிர்பாராத வகையில் திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் மூழ்கியுள்ளனர்.
தகவலறிந்த மலேசிய கடலோர காவல் படையினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதுடன், 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விபத்தில் 25 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
000
Related posts:
அமெரிக்காவில் இஸ்லாமிய மதகுரு உட்பட இருவர் சுட்டு கொலை!
கடும்போக்கு நிலைப்பாட்டை கைவிடும் டொனால்ட் டிரம்ப்!
துருக்கி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 500 ஐ தாண்டியது – 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ...
|
|
|


