மரண ஊர்வலத்தில் விமானப்படை தாக்குதல் : 150 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Monday, October 10th, 2016

ஏமனில் முன்னணி போராளியின் உறவினரின் இறப்பை தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டவர்கள் மீது, அந்நாட்டின் விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர் பலியாகியதுடன் 500 பேர் படுகாயமடைந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகள் குழுவை சேர்ந்தவரின் இறுதி அடக்கத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது, சவுதி தலைமையிலான கூட்டுப்படை விமான தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மனிதநேயமற்ற தாக்குதல்மீது உரிய விசாரணை நடத்தவும், இனியும் இதுபோன்ற தாக்குதல் தொடராதிருக்க சர்வதேச சமுதாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த கண்காணிப்பகம் வலியுறுத்தி உள்ளது.

ஏமன் தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ஏமன் அரசாங்கம் சண்டையிட்டு வருகிறது. ஏமன் அரசிற்கு சவூதி தலைமையிலான கூட்டணி படையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

1078641559Yeman

Related posts: