மன்மோகன் சிங்கை விமர்சிக்கும் அமித் ஷா!
Monday, July 3rd, 2017
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விட தற்போதைய பிரதமர் மோடி குறைந்தளவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகின்றார் என பா.ஐ.க. தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
கோவா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா தலைநகர் பணாஜியில் உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்-முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலேசியாவில் படிக்க வேண்டியதை தாய்லாந்தில் படிப்பார். ஆங்கிலத்தில் எழுதி வைத்து அப்படியே வாசித்துவிட்டு வருவார். பதவிக்காலத்தில் அவர் சீனா அமெரிக்கா ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தமை யாருக்கும் தெரியாது. ஆனால் தற்பொழுது மோடி எங்கு சென்றாலும் விமான நிலையத்தில் மக்கள் சிறப்பாக வரவேற்பு அளிக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


