மத்திய தரைக்கடலில் தத்தளித்த 1,300 பேர் மீட்பு!

Tuesday, March 7th, 2017

மத்திய தரைக் கடல் ஊடாக பயணித்த நிலையில் மீட்கப்பட்ட ஆயிரத்து 1,300 புகலிடக்கோரிக்கையாளர்கள் இத்தாலியின் சிசிலித் தீவுகளுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட 16 வயதான சிறுவன் ஒருவன், உயிரிழந்துள்ளதாக இத்தாலி கடற்பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாண்டு மாத்திரம் மத்திய தரைக் கடல் ஊடாக அதிகளவிலான குடியேற்றவாசிகள் இத்தாலிக்குள்பிரவேசித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளை விட இவ்வாண்டு அதிகளவான குடியேற்றவாசிகள் மத்திய தரை கடல் ஊடாகஇத்தாலிக்குள் பிரவேசிப்பார்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது.

சிசிலி தீவுகளை நோக்கி பயணிக்கும் மேலும் 500 குடியேற்றவாசிகள் அடுத்த இரண்டு நாட்களில் குறித்த தீவைசென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 487 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளதாககுடியேற்றத்திற்கான சர்வதேச ஸ்தாபனம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு இத்தாலிக்குள் பிரவேசித்தகுடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 57 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக இத்தாலியின் உள்விவகார அமைச்சுகூறியுள்ளது.

2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இத்தாலிக்குள் பிரவேசித்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கைஅரைமில்லியனை எட்டியுள்ளதுடன், கடந்த ஆண்டு ஒரு இலட்சத்து 81 ஆயிரம் குடியேற்றவாசிகள்இத்தாலிக்குள் படகுகள் மூலம் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: