மக்கள்தான் நாட்டை பாதுகாக்க வேண்டும் – எகிப்து ஜனாதிபதி
Monday, April 25th, 2016
எகிப்தையும் அதன் அரச நிறுவனங்களையும் நாட்டு மக்கள் பாதுகாக்க வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல் சீசி வலியுறுத்தியுள்ளார்.
அரச எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஒன்றுபட்டு இருக்கும் பட்சத்தில் எகிப்தில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காது என தொலைக்காட்சி உரையொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
செங்கடலில் உள்ள இரண்டு தீவுகளின் இறையாண்மையை சவுதி அரேபியாவிற்கு விட்டுக்கொடுக்கும் உடன்படிக்கை தொடர்பில் எகிப்தில் எதிர்ப்புக்கள் வலுவடைந்துவருகின்றன.
எனினும் இரண்டு தீவுகளையும் விட்டுக்கொடுக்கும் தனது தீர்மானத்தை எகிப்து ஜனாதிபதி நியாயப்படுத்தியுள்ளார்.
குறித்த இரண்டு தீவுகளும் சவுதி அரேபியாவிற்கு சொந்தமானது என அப்துல் ஃபத்தா அல் சீசி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|
|


