மக்களை ஏமாற்றும் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது, தான் ஜனாதிபதியானால் தனக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கிடைக்க வேண்டிய 4 இலட்சம் ரூபா பணம் மீதமாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அமெரிக்க சட்டத்திற்கமைய சம்பளத்திற்கான காசோலை ஜனாதிபதியால் எழுதப்பட வேண்டும். சம்பள காசோலை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் அந்த காசோலை, அந்நாட்டு திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்படும் என வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதுவரையில் அமெரிக்க ஜனாதிபதிக்கான இரண்டு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன., அவற்றில் ஒன்றேனும் திறைச்சேரிக்கு செல்லவில்லை என இது தொடர்பில் ஆய்து மேற்கொண்டு, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி வாக்குறுதியளித்தனை செய்யாமல் சம்பளத்தை பெற்றுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Related posts:
|
|