தொழிலதிபர் ஒருவரை வெளியுறவுச் செயலராக தேர்ந்தெடுத்துள்ள டிரம்ப்!

Sunday, December 11th, 2016

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், எண்ணெய் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியான ரெக்ஸ் டில்லர்சனை தனது அரசாங்கத்தின் வெளியுறவுச் செயலராக தேர்ந்தெடுத்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் சனிக்கிழமையன்று இரண்டாம் சந்திப்பை நடத்தினர்.

எக்ஸான் மொபில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் டில்லர்சனுக்கு அரசியல் அனுபவங்கள் இல்லை என்ற போதிலும், ரஷியா உட்பட பல வெளிநாட்டு அரசுகளுடன் வர்த்தகம் செய்துள்ளார்; அதன் மூலம் ரஷிய அதிபர் புதினுடன் நல்லுறவை உருவாக்கியுள்ளார்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜான் மெக்கைன், டில்லர்சனுக்கு ரஷியாவுடனான தொடர்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.மேலும் அவரின் நியமனம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆழமாக ஆராயப்படும் என்றும் தெரிகிறது.

1629440129Untitled-1

Related posts: