அமெரிக்க ரோந்து நடவடிக்கை: தென் சீன கடற்பரப்பில் அதிகரிக்கும் பதற்றம்!

Tuesday, February 21st, 2017

அமெரிக்க அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து தென் சீன கடல் வழியிலேயே இடம்பெறுகின்றது. இந்நிலையில் தென் சீன கடல் பகுதியில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

எனினும், தென்சீனக்கடலில் உரிமை கோரி பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனை, தைவான், மலேசியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் சீனாவுடன் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றன.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த கண்டனத்திற்கு சீனா கடந்த 15ஆம் திகதி கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில். அமெரிக்கா தனது அதி நவீன விமானம் தங்கி போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.எஸ்.எஸ் Carl Vinson விமானம் தாங்கி போர்க்கப்பல், யு.எஸ்.எஸ் Wayne E. Meyer நாசகார கப்பல், F/A-18 jet fighters விமானம் உள்ளிட்டவைகள் இந்த ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த திடீர் ரோந்து நடவடிக்கையின் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவாகியிருப்பதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: