பெல்ஜியம் மெட்ரோ நிலையம் மீண்டும் திறப்பு!

Tuesday, April 26th, 2016
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பெல்ஜியம் மெட்ரோ நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் கடந்த மாதம் 22–ந்திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள் விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 31 அப்பாவி மக்கள் பலியாயினர்.
தாக்குதலை தொடர்ந்து விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு விமான நிலையம் செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான மெல்பீக் மெட்ரோ நிலையம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ நிலையத்தில் மட்டும் இந்தியர் ஒருவர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு எங்கள் மன உறுதியை காட்டும் சின்னமாக இந்த ரெயில் நிலையம் இருக்கும் என்று பெல்ஜியம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: