மக்களின் நம்பிக்கைதான் எனது பாதுகாப்பு – மக்களவையில் பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

எதிர்க்கட்சிகளின் பொய்கள், அவதூறுகள், குற்றச்சாட்டுகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் அரணாக, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து, பிரதமர் மோடி ஆற்றிய உரையின் போதே இதனைத் தெரிவித்தார்.
அதானி குழும விவகாரத்தில், பிரதமர் மோடி மீது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்த நிலையில், ‘உச்சகட்ட விரக்தியில் இருக்கும் சிலரால், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை ஏற்க முடியவில்லை எனவும் 140 கோடி இந்தியர்களின் சாதனை, சிலரின் கண்களுக்கு புலப்படவில்லை’ என்றும் பிரதமர் மோடி கூறினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியால், தேசம் ஒரு தசாப்தத்தை இழந்துவிட்டதாகவும், சுதந்திரத்துக்குப் பிறகு ஊழல் நிறைந்த தசாப்தம் இதுவே எனவும் அவர் காங்கிரஸை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|