போர் பகுதியிலிருந்து மக்களை காப்பாற்ற ரஷியா முயற்சி!

Friday, July 29th, 2016

சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் அலெப்போ நகரை விட்டு மக்கள் வெளியேற சிரியா ராணுவத்துடன் சேர்ந்து மனிதநேய பாதைகளைத் திறக்க உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

அலெப்போ நகரிலிருந்து போராளிகளும் வெளியேற வேண்டும் என்று ரஷியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி ஷொய்கு தெரிவித்துள்ளார்.போராளிகள் வசமிருந்த அலெப்போ நகரரின் கிழக்கு பகுதிக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் சிரியா ராணுவம் துண்டித்துவிட்டதாக அறிவிப்பு வெளியான அடுத்தநாள் ரஷியாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த அறிவிப்பு தொண்டு நிறுவனங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், சிரியாவுக்கான ஐ.நா தூதர் ஸ்டெப்பன் டி மிஸ்டுரா, இதுகுறித்து தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்கிறார்.பொதுமக்களுக்கு ஓய்வுதரும் வகையில் எது அமைந்தாலும் அதனை வரவேற்பதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்நகரை விட்டு மக்கள் வெளியேறுவது என்பது அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இருக்க வேண்டும் என்பதை செஞ்சிலுவை சங்கம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.சிரியா அரசு படையினர் மற்றும் ரஷியா ராணுவத்தினர் நடத்திய தீவிர குண்டுத்தாக்குதலை எதிர்கொண்ட சுமார் 3,000 பொதுமக்கள் கிழக்கு அலெப்போவில் இன்னும் வசிக்கின்றனர்.

Related posts: