போர் நிறுத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளும் – அமெரிக்கா நம்பிக்கை !
Monday, June 3rd, 2024
போர் நிறுத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
6 வாரகால போர் நிறுத்தத்துடன் குறித்த முன்மொழிவுகள் அமுலாகும் வகையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இஸ்ரேல் அரசாங்கத்தின் சில தரப்பினர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சாளர் ஜோன் கிர்பி, போர் நிறுத்த முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் உத்தியோகபூர்வ பதிலுக்காக காத்திருப்பதாகவும் ஜோன் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பதவி விலகினார் தென்னாபிரிக்க ஜனாதிபதி.!
விமானங்களை திருடி ஓட்டிப்பார்த்த 13 வயது சிறுவன்!
ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதிக்குள் பூர்த்தி - அமைச்சர் அர்ஜூன!
|
|
|


