போராட்டக் குழுவின் முன்னணி தளபதி உயிரிழப்பு!

காசாவில் பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் முன்னணி தளபதி ஒருவர் இஸ்ரேலின் வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இதற்கு பதில் நடவடிக்கையாக அந்த போராட்டக் குழு டெல் அவிவ் உட்பட இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுதாக்குதல் மேற்கொண்டுள்ளது.
கடந்த ஒரு சில மாதங்களில் இடம்பெற்ற இந்த உக்கிர தாக்குதலின்போது, டமஸ்கஸில் இருக்கும் இஸ்லாமிய ஜிஹாத் அதிகாரி ஒருவரின் வீட்டை இலக்குவைத்தும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த அதிகாரியின் மகன் உட்பட இருவர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு இஸ்ரேல் மறுத்துள்ளது.
Related posts:
சிரியாவில் இரசாயன தாக்குதல்!
குற்றவியல் பிரேரணையில் அமெரிக்கா அதிபர் வெற்றி!
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது ஸ்பெயின் - மிகப் பெரிய அழுத்தத்தில் இஸ்ரேல்!
|
|