போதை மருந்து வர்த்தகம் தொடர்பாக சிறைப்பட்டிருந்த மேயர் பிலிப்பைன்ஸில் சுட்டுக்கொலை!

Saturday, November 5th, 2016

போதை மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கைதாகி சிறையில் இருந்த பிலிப்பைன்ஸ் மேயர் ஒருவர், அவருடைய சிறை அறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சிறையில் சட்டபூர்வமற்ற ஆயுதங்களை தேடியபோது, அதிகாரிகளை அல்புயேரா நகர மேயர் ரோலான்டோ எஸ்பிநோசா துப்பாக்கியால் சுட தொடங்கிய பின்னர், அவரும், அவருடன் இருந்தவரும் சுட்டு கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

போதை மருந்து வர்த்தக ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதில் ஈடுபட்டுள்ளோரை வெட்கப்பட வைக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே ஆகஸ்ட் மாதம் பெயர்களை வாசித்த 150 -க்கு மேலான போதை மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட அதிகாரிகளில் எஸ்பிநோசாவின் பெயரும் இருந்தது.

தான் கொல்லப்படக்கூடும் என்று அஞ்சுவதாகக் கூறி, அவர் காவல்துறையிடம் சரணடைந்தார். டுடொர்டேவால் சாம்சுதின் டிமௌகோம் என்று அழைக்கப்பட்ட இன்னொரு நகர மேயர், பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் காவல்துறையினரோடு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கடந்த வாரம் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

_92281246_4edadba2-2404-4b50-92f4-80c9d04aa081

Related posts: