போதை பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் குறித்த விமர்சனத்துக்கு பிலிப்பைன்ஸ் மறுப்பு!

Sunday, September 25th, 2016

பிலிப்பைன்ஸில் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட அரசால் மேற்கொள்ளப்பட்ட போதை பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி எழுந்துள்ள சர்வதேச விமர்சனத்தை, ஐநா பொது சபையில் நிகழ்த்திய தனது உரையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மறுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் வெளியுறவு அமைச்சரான பெர் ஃ பெக்டோ யாசாய், தேவையற்ற குறுக்கீடுகள் இல்லாமல் தனது தேசிய இலக்குகளை அடைய தன் நாடு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

கடந்த மே மாதத்தில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்த், நாட்டில் ஊழல் மற்றும் , குறிப்பாக, போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை ஆறு மாதங்களுக்குள் அகற்றி விடுவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

_91372594_erfecto_yasay_640x360_afp_nocredit

Related posts: