பேருந்து விபத்து: இறந்த மாணவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வு!

இந்தியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹிமாச்சல் பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அனர்த்தத்தில் பேருந்தின் சாரதி மற்றும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர்.விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 மாணவர்கள் வரையில் இருந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Related posts:
அலுமினியம் மற்றும் இரும்பு இறக்குமதி மீதான வரியை அதிகரிக்கும் அமெரிக்கா!
சிங்கப்பூரில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்!
கியூபாவில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !
|
|