பெல்ஜியத்தில் கருணைக் கொலை மூலம் இறந்தது குழந்தை!

Saturday, September 17th, 2016

பெல்ஜியத்தில் மிக மோசமான உடல் நிலை  பாதிக்கப்பட்ட  ஒரு குழந்தை கருணைக் கொலை மூலம் இறந்து போக உதவி செய்யப்பட்டது.

மிக மோசமான உடல் நிலை  பாதிக்கப்பட்ட  குழந்தைகள் கருணைக் கொலை மூலம் இறந்து போக அனுமதி கோருவது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், முதல் குழந்தை இறந்துள்ளது.

பெல்ஜிய அரசின் கருணைக் கொலை தொடர்பான ஆளுகை குழுவின் தலைவர் விம் டிஸ்டெல்மென்ஸ் பேசுகையில், இந்த குழந்தையின் விவரம் கடந்த வாரம் ஒரு மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது என்றார்.

அவர் அந்த குழந்தை மிக மோசமான உடல் நிலையில் இருந்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த குழந்தையின் வயது, பாலினம், அதற்கு என்ன நோய் என்ற எந்த தகவலும் அளிக்கவில்லை.உலகில் பெல்ஜியம் மட்டும் தான் எந்த வயதிலும் குழந்தை இறந்து போக தேர்வு செய்து கொள்ள இடமளிக்கும் நாடு ஆகும்.

பிப்ரவரி 2014ல் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் பெல்ஜியத்திலும், உலக நாடுகளிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

_91281373_belgium

Related posts: