பணக்காரர்- ஏழைகளுக்கு இடையிலான சுகாதார இடைவெளி பிரித்தானியாவில் அதிகரிப்பு!

Monday, August 14th, 2017

பிரித்தானியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சுகாதார இடைவெளி அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக ஏழை மக்கள் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளால் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சுகாதார திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இயலாமை மற்றும் நோய் காரணமான மரணங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் குழந்தை பிறந்தவுடன் இறக்கும் சம்பங்களும் அவரச தேவை கருதி மருத்துவமனை கொண்டுசெல்லப்படும் போது மரணமடையும் சம்பவங்களும் இடம்பெறுவதாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய இடைவெளிகளை குறைப்பதாக அரசாங்கம் உறுதிமொழிகள் வழங்கிய போதிலும் கடந்த தசாப்தத்திலும் பார்க்க 2010 இல் அதிகரித்துள்ளதை அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்த ஆண்களின் எதிர்பார்க்கப்பட்ட ஆயுட் காலம் செல்வந்தர்களின் ஆயுட்காலத்திலும் 9.1 வருடங்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 9.2 வருடங்களாக அதிகரித்துள்ளது. பெண்கள் மத்தியில் 6.8 முதல் 7.1 வருடங்கள் வரையில் இந்த இடைவெளி காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: