விக்கி லீக்ஸ் இணை நிறுவனரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இணங்கியது பிரித்தானியா!

Friday, June 14th, 2019

விக்கி லீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசான்ஜ்சை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரித்தானிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இரகசிய தகவல்களை சட்டவிரோதமாக கையாண்டு கசியவிட்ட குற்றச்சாட்டின் விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக அசான்ஜ் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, அசான்ஜிற்கு 2012 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகம், அடைக்கலம் அளித்திருந்தது.

7 ஆண்டுகளின் பின்னர், கடந்த ஏப்ரல 11ம் திகதி அவருக்கு அளித்த பாதுகாப்பை தூதரகம் விலக்கிக்கொண்டது.

அதேசமயம், ஸ்வீடனில் அசான்ஜிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட 18 வழக்குகள் இருந்த நிலையில், லண்டன் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அசான்ஜுக்கு அளிக்கப்படடுவந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டதையடுத்து, லண்டன் காவற்துறை அவரை கைது செய்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியது.

இந்தநிலையில், அவர் மீது அதிக வழக்குகள் உள்ள காரணத்தால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு பிரித்தானிய நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரித்தானியா இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts: