பெருவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு!

Sunday, September 11th, 2016

பெரு நாட்டின் வட பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ரிக்டர் என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

மொயாம்பமா நகரின் வடக்கே 50 கி.மீ தொலைவில் பூமிக்கடியில் 114 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சான் மார்ட்டின் பிராந்திய தலைநகரான மொயாம்பமா நகரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா? என தகவல் ஏதும் வெளியாகவில்லை.

நேற்று முன்தினம் வடகொரியா 5வது முறையாக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டபோது அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

peru_earthquake copy

Related posts: