பெங்களூரில் வன்முறையாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!

Tuesday, September 13th, 2016

காவிரிப் பிரச்சினை தொடர்பாக பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

பெங்களூர் ராஜகோபால் நகர் பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றது. கலவரக்காரர்களை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில், உமேஷ் (28) என்பவர் உயிரிழந்தார். அவர் ஹெக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலைமை பதற்றமாக இருப்பதாகவும், ஆனால் கட்டுக்குள் இருப்பதாகவும் காவல் துறை தலைவர் ஓம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெங்களூர், மைசூர், மண்டியா, தார்வாட் உள்பட பல்வேறு நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெங்களூரில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் பேருந்துகள் ஒட்டுமொத்தமாக தீ வைக்கப்பட்டன. மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுதவிர, தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40 லாரிகள் கொளுத்தப்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

160912132846_karnataka_violence_512x288_bbc_nocredit

Related posts: