உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துகின்றது ரஷ்யா – விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணைகள் விரைவில் பயன்படுத்தப்படும் எனவும் புடின் தெரிவிப்பு!

Friday, March 1st, 2024

கடந்த இரண்டு ஆண்டுகளாக, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மறுபுறம் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றும் போது, உக்ரைன் போர் தொடர்பாக முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மேம்பட்ட நவீன ஆயுதங்களை ரஷ்யா தற்போது பயன்படுத்துகிறது என புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடன் நடந்து வரும் போரில் ரஷ்ய இராணுவப் படையினர் கின்சல், ஜிர்கான் போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் இராணுவ தளங்களை ரஷ்யாவின் ஆயுதங்கள் மிகத் துல்லியமாக தாக்கியதாகவும் Avangard மூலோபாய ஹைப்பர்சோனிக் கிளைடர்கள் மற்றும் பெரிஸ்வெல் லேசர் அமைப்புகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஹைப்பர்சோனிக் கிளைடர்கள். இலக்கை நோக்கி அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அந்த ஏவுகணைகள் அதிக உயரத்தில் மிக வேகமாக பயணித்து இலக்கை தாக்க வல்லது.

கனரக மூலோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணைகள் விரைவில் பயன்படுத்தப்படும் எனவும் புடின் கூறியுள்ளார்.

அணு ஆயுத ஏவுகணையான புரேவ்ஸ்னிக் மற்றும் நீருக்கடியில் அணு ஆயுதம் தாங்கிய போஸிடான் ட்ரோன் ஆகியவற்றின் சோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: