புதிய 19 அமைச்சர்களுடன் இந்தியமத்திய அமைச்சரவை விரிவாக்கம்!

Tuesday, July 5th, 2016

19 புதிய  அமைச்சர்களுடன் மத்திய அமைச்சரவை  இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, தனது தலைமையிலான அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். அமைச்சரவையில் ஏற்கனவே இருந்த 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக 19 புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேபினட் அந்தஸ்த்தில் உள்ள அமைச்சர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இணையமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகருக்கு கேபினட் அந்தஸ்த்து கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பொறுப்புடன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இலாகாவை அவர் கவனிப்பார்.

புதிய அமைச்சர்கள் இன்று காலை 11 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி மூத்த அமைச்சர்கள் தலைமையில் பதவியேற்றுக் கொண்டனர்.

ஃபாகன் சிங் குலாஸ்தே, எஸ்.எஸ். அலுவாலியா, ரமேஷ் சாந்தப்பா, விஜய் கோயல், ராஜென் கோகென்,அனில் மாதவ் தேவ், பர்சோட்டம் ரூபாலா, எம்.ஜே. அக்பர், அர்ஜுன் ராம் மேக்வால், ஜஷ்வந்த் சிங் பாஷ்வால், மகேந்திரநாத் பாண்டே, அஜய் தம்தா, கிருஷ்ணராஜ், மன்சூக் மாண்ட்வியா, சி.ஆர்.சவுத்ரி, பி.பி. சவுத்ரி,சுபாஷ் பாம்ரே ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: