14 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு தொடர்பில் மூவரைத் தேடும் பிலிப்பைன்ஸ்!

Monday, September 5th, 2016

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டேயின் சொந்த நகரமான தாவோவில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, மூவரைத் தேடி வருவதாக, பிலிப்பைன்ஸ் பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர்.

சனசந்தடிமிக்க சந்தையொன்றில் இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, நாட்டில் “சட்டம்சீர்குலைவு நிலைமை”யை, ஜனாதிபதி டுட்டேர்ட்டே பிரகடனப்படுத்தியிருந்தார்.

இந்தத் தாக்குதலை, அபு சையாப் குழு நடத்தியதாகவே சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இரண்டு பெண்களையும் ஓர் ஆணையும், பொலிஸார் தேடி வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர். தாவோவில், அபு சையாப் குழுவுக்கெதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், அதற்கான பதிலடியாகவே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என, ஜனாதிபதி டுட்டேர்ட்டே தெரிவித்தார். ஆனால், இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் குழுவினர், ஏனைய காரணங்களையும் முற்றுமுழுதாக நிராகரித்துவிட முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

 article_1472998211-Philippines3suadhsahfgsvs

Related posts: