சோலி ஆட்சியில் இந்தியாவுடன் செய்து கொண்ட100 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் – மாலைதீவு ஜனாதிபதி அலுவலக செயலாளர் அறிவிப்பு!

Wednesday, November 22nd, 2023

மாலைத்தீவு நாட்டின் ஜனாதிபதியாக 2018 முதல் இப்ராஹிம் முகமது சோலி (மாலைத்தீவு ஜனநாயக கட்சி) பதவி வகித்தார். இவரது பதவிக் காலத்தில் மாலைத்தீவு இந்தியாவின் நட்பு நாடாக விளங்கியது. அங்கு 77 இந்தியவீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக முகாமிட்டுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முகமது முய்சு கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

சீன ஆதரவு தலைவராக கருதப்படும் முய்சு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மறுநாளே இந்தியா தனது இராணுவ வீரர்களை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி அலுவலக செயலாளர் முகமது பிருசுல் அப்துல் கலீல் அளித்தபேட்டியில், “சோலி ஆட்சியில் இந்தியாவுடன் செய்து கொண்ட100 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

000

Related posts: