புதிய திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை – கலைக்கப்பட்டது அமெரிக்காவின் கொரோனா தடுப்பு செயலணி!

அமெரிக்காவில் கொரோனா தடுப்புக்காக உப ஜனாதிபதி மைக் பென்ஷ் தலைமையில் நிறுவப்பட்டிருந்த செயலணி கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸிக்கு எதிரான புதிய திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் இந்த செயலணி கலைக்கப்படுதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம்பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர்.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாள்தோறும் உயிரிழக்கின்றனர். இதன் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க வர்த்தகர்கள் தயக்கம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் நாட்டை அடுத்த ஐந்து வருடங்களுக்கு மூடி வைத்திருக்க முடியாது என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Related posts:
மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 35 பேர் பலி!
சவுதி அரேபியவில் திரைப்பட அனுமதி: 15 நிமிடங்களில் திரையரங்கு நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை!
ஹோட்டலில் பாரிய வெடிப்பு சம்பவம்!
|
|