புகையிரதத்தில் முதல் வகுப்பு பயணம் மேற்கொள்ள அரசியல்வாதிகளுக்கு தடை?

Sunday, December 4th, 2016

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளில் புகையிரத முதல் வகுப்பு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சுவிஸில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகையிரத முதல் வகுப்பில் நாடு முழுவதும் இலவசமாக பயணம் மேற்கொள்ள அரசு GA travel card என்ற பயண அட்டையை வழங்கி வருகிறது.

இதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருடத்திற்கு 90 நாட்களுக்கு மேல் முதல் வகுப்பில் பயணம் செய்வதால் ஒவ்வொரு வருடமும் அரசிற்கு 6,00,000 பிராங்க் (8,81,25,103 இலங்கை ரூபாய்) செலவாகிறது. இதனால் அரசாங்கத்திற்கு நிதிச்சுமை ஏற்படுவதால் இதனை தவிர்க்க தற்போது கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.

சுவிஸ் மக்கள் கட்சியை (SVP) சேர்ந்த Lukas Reimann என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தான் அரசிற்கு இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசிய போது, ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், புகையிரத ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் இச்சலுகையை விட்டுக்கொடுத்தால் அரசாங்கத்திற்கு மில்லியன் பிராங்க் அளவில் செலவு குறையும்.

புகையிரதங்களின் முதல் வகுப்பை தவிர்த்து விட்டு இவர்கள் அனைவரும் அரசு வழங்கும் இரண்டாம் வகுப்பு பயண அட்டையை பெற முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதுள்ள 246 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 34 பேர் தவிர மற்ற அனைவரும் முதல் வகுப்பு பயண அட்டையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

swiss-680x365

Related posts: